கந்தையா ஸ்ரீகணேசன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xiii, 300 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 875., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-339-6.
கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பேராசிரியர், கூத்தாய்வாளர், நாடகக் கலைஞர் சின்னையா மௌனகுருவின் நேர்காணல்களின் தொகுப்பு. தேன்மாலைப் பொழுது நூல் (டாக்டர் கனக. சுகுமார், பொன்.பூலோகசிங்கம் 1983), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வானொலி (எழில்வேந்தன், 1994), சுபமங்களா சஞ்சிகை (கோமல் சுவாமிநாதன், தமிழ்நாடு, 1995), புதிய பாதை பத்திரிகை (ஐங்கரநேசன், சென்னை, 1996), தமிழ் இணையம் (பௌத்த ஐயனார், சென்னை, 1996), உங்கள் நூலகம் பத்திரிகை (முத்தையா வெள்ளையன், சென்னை, 1998), தேனாடு சஞ்சிகை (வாசுதேவன், மலர்ச்செல்வன், மணிசேகரன், மட்டக்களப்பு, 2003), கூத்தரங்கம் சஞ்சிகை (தேவ் ஆனந்த், யாழ்ப்பாணம், 2004), பயில்நிலம் சஞ்சிகை (க.அபிராமி, கி.திவாகரன், கொழும்பு, 2004), கனடா தமிழ் தொலைக்காட்சி (ஆத்மா, கனடா, 2004), உதயன் பத்திரிகை (தேவ் ஆனந்த், யாழ்ப்பாணம், 2005), கலைமுற்றம்-கனடா தொலைக்காட்சி (சொர்ணலிங்கம், கனடா, 2006), வீரகேசரி (செ.ஸ்ரீகோவிந்தசாமி, செங்கல்லடி, 2006), க.ஸ்ரீகணேசன் இந்நூலுக்காகக் கண்ட நேர்காணல் 2012 ஆகிய 14 நேர்காணல்களினூடாக பெராசிரியர் மௌனகுருவின் துறைசார் ஆளுமைகளும், அரங்கியல் வரலாறும், அவரது அனுபவங்களும் விரிவாகவும், தெளிவாகவும் வெளிக்கொணரப்பட்டுள்ளன. 1983-2013 காலகட்டத்தின் ஈழத்து அரங்கியல் பற்றிய விரிவாக பதிவு இதுவாகும்.