ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
32 பக்கம், சித்திரம், விலை: ரூபா 80., அளவு: 21×15 சமீ.
கேணிப்பித்தன் அருளானந்தனின் சிறுவர் பாடல் தொகுப்புகளின் வரிசையில் புது வரவாக அமையும் மற்றுமொரு நூல் இது. காலை வணக்கம், வரவேற்கிறோம், திக்கு முக்குத் தாளம், செல்வம் உனக்கே பாட்டு, அண்ணன் பாடும் பாட்டு, வாழ்ந்து காட்டு, பறவையினத்தைப் பாரு, கல்வி கற்க வேண்டும், புதுமைப்பெண், புகழ வாழ்வாய், குளிர் நீராவாய், சுழலும் சில்லு, உப்புக் காற்று, மழைக்காலம், வெயிற்காலம், சூரியக் குஞ்சு, வெள்ளம் பரவுது, மேகக் குடை, குடையுலா, கவனமாக இரு, புசிக்கக்கொடு, சூழலியல், இயற்கைக்காட்சி, காலை நேரம், ஐம்புலனறிவு, கற்போம், தாவரத்தைப்பார், வெள்ளிக் குஞ்சுகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 28 சிறுவர் பாடல்களை இந்நூல் உள்ளடக்கியுள்ளது.