செ.யோகராஜா (தொகுப்பாசிரியர்). வாழைச்சேனை: கலாசாரப் பேரவை, பிரதேச செயலகம், கோறளைப் பற்று, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (மட்டக்களப்பு: ஏ.ஈ.ரெக் மறுதோன்றி அச்சகம், 28, பார் வீதி, செலான் வங்கி அருகாமை).
viii, 32 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 19.5×14.5 சமீ.
சிறுவர் தினச் சிறப்பு வெளியீடாக 1.10.2003இல் வெளியிடப்பட்ட நூல். ஈழத்தில் இதுவரை வெளிவந்த பல சிறுவர் பாடல் தொகுப்புகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் இவை. அறிவியல் விளக்கம், அறிவியல் கண்டுபிடிப்பு, விஞ்ஞானி, சூழலியல், புவியியல், சுகாதாரம், கணிதம் ஆகிய விடயங்களில் எழுதப்பட்ட 28 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. மஹாகவி, வளவைவளவன், ச.அருளானந்தம், மனோ பற்குணம், மாவை வரோதயன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், தில்லைச் சிவன், பா.அமிர்தநாயகம், க.வீ, மு.பொன்னம்பலம், வ.இராசையா, ஆடலிறை, வாகரைவாணன், த.துரைசிங்கம், திமிலை மகாலிங்கம், வெற்றிவேல் விநாயகமூர்த்தி, மருதமைந்தன் ஆகியோர் எழுதிய பாடல்கள் இவை.