சோமநாதர் இராசேந்திரம் (புனைபெயர்: தாமரைத்தீவான்). திருக்கோணமலை: கேசிகன் வெளியீடு, 44/18 கிருஷ்ணபுரம், மட்டிக்கழி, கண்டிவீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (திருக்கோணமலை: அஸ்ரா பதிப்பகம், 43, தி.ச.வீதி).
viii, 105 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×14 சமீ., (ISBN: 978-955-500038-9-6).
ஆசிரியர், அதிபர் பதவிகளை கல்விப்புலத்தில் வகித்து ஓய்வுபெற்றுள்ள தாமரைத்தீவான் கிழக்கிலங்கையின் முன்னோடிக் கவிஞராவார். இவரது பல கவிதைகள், அரங்குகளை அலங்கரித்தவை. தான் படித்தவற்றுள், அவர் பெற்றுக்கொண்டதும் இன்று வாழ்வியல் அனுபவமாகிக் கொண்டிருப்பவையுமான உண்மைகளைத் தொகுத்துத் தந்திருக்கிறார். ஆத்திசூடி தொடக்கம் இன்றளவில் இவரின் மனதில் பதிந்தவற்றைத் தோண்டியெடுத்து இக்களஞ்சியத்தை உருவாக்கியுள்ளார். 511 தலைப்புகளின்கீழ் தனது கருத்தைக் கவர்ந்த நூல்கள், ஆசிரியர்கள், தனிநபர்கள் போன்றோர் பற்றி குறுங்கவிதை வடிவில் சிறுகுறிப்புகளாகத் தந்திருக்கிறார்.