8558 பசுமைத் தாயகம்: சிறுவர் அரங்கு.

முத்து இராதாகிருஷ்ணன். திருக்கோணமலை: திருமதி கே. இராதாகிருஷ்ணன், மதுஷா வெளியீடு, 164, திருஞானசம்பந்தர் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு: ஷார்ப் கிராப்பிக்ஸ் பிரைவேட் லிமிட்டெட்).

72 பக்கம், வண்ணத் தகடுகள்,  விலை: ரூபா 225.00, அளவு: 20.5×14.5 சமீ.

இந்நூலில் தேனகம், பசுமைத் தாயகம், இயற்கை ஆகிய மூன்று சிறுவர் நாடகங்களின் கதைத் சுருக்கமும், நாடக எழுத்துருக்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தேனகம் 2008ம் ஆண்டு திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் ஆரம்பப் பிரிவு மாணவர்களுடனான அரங்கப் பட்டறையின் மூலம் உருவாக்கப்பட்டு  மாணவர்களால் மேடையேற்றப்பட்டது. கிழக்கு மாகாண சிறுவர் அரங்கப் போட்டியில் மாகாண மட்டத்தில் முதலாம் இடத்தையும் பெற்றிருந்தது. பசுமைத் தாயகம்- சிறுவர் அரங்கும் இதே பாடசாலையின் ஆரம்பப் பிரிவின் தரம் 5 மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது. இயற்கை என்ற சிறுவர் அரங்கு இதுவரை மேடையேற்றப்படவில்லை. வடமாகாணக் கல்வித் திணைக்களத்தின் மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் முத்து இராதாகிருஷ்ணன், ஈழத்து இலக்கியச் சூழலில் கல்வியியலாளராகவும், சிறுகதை எழுத்தாளராகவும், நவீன ஓவியராகவும், அரங்கியலாளராகவும் அறியப்பட்டவர். சிறுவர் அரங்கச் செயற்பாடுகளில் தீவிர ஆர்வமுள்ளவர்.

ஏனைய பதிவுகள்

Wie Erledigen Eigentlich Spielautomaten?

Content Gewinne Within Spielautomaten Qua Drei Bügeln Wirklich so Durchsteigen Diese Den Manipulierten Spielautomaten Vortragen Die leser Kostenlose Slots Via 3 Glätten! Obwohl Spielautomaten en