8724 செ.கணேசலிங்கனின் நீண்டபயணம் நாவலும் நாவல் பற்றிய கருத்துரைகளும்.

செ.கணேசலிங்கன் (தொகுப்பாசிரியர்). கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, ½ டாம் வீதி, 5வது பதிப்பு, ஆடி 2009. 1வது பதிப்பு செப்டெம்பர் 1965, 2வது பதிப்பு நவம்பர் 1994, 3வது பதிப்பு டிசம்பர் 2002, 4வது பதிப்பு, டிசம்பர் 2007 (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 361, 1/2, டாம் வீதி).

x, 246 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-659-195-8.

1928இல் பிறந்த செ.கணேசலிங்கனின்  இலக்கியப் பிரவேசம் 1949இல் தொடங்கிற்று.  அவரது முக்கிய படைப்புகளுள் ஒன்றான நீண்ட பயணம் என்ற நாவல் செப்டெம்பர் 1965இல் வெளியானது. பின்னர் நவம்பர் 1994, டிசம்பர் 2002, டிசம்பர் 2007 ஆகிய காலங்களில்  மேலும் நான்கு பதிப்புகளைக் கண்டது.  பிற்காலத்தில்  இந்நாவல் பற்றி வெளிவந்த விமர்சனங்கள், கருத்துரைகள் ஆகியவற்றையும்  சேர்த்து  மீளவும் இந்நாவல் ஆடி 2009இல்  ஐந்தாவது பதிப்பாகப் பிரசுரமாகியுள்ளது. (பதிப்பகத்தினால்  5வது பதிப்பாக இது கொள்ளப்படுகின்றது). முதல் 181 பக்கங்கள் நாவலும் 182-246 வரை ஆறு கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. செ.கணேசலிங்கனின் நீண்;ட பயணம் ஒரு முன்னுரை (அ.சண்முகதாஸ்), நீண்;ட பயணம் நாவலின் பாத்திரப் படைப்பு (மனோன்மணி சண்முகதாஸ்), நீண்;ட பயணம் நாவல் புலப்படுத்தும் சமுதாயப் பிரச்சினைகள் (ம.இரகுநாதன்), நீண்ட பயணம் நாவலின் மொழிநடை (செல்வ அம்பிகை நடராஜா), நீண்ட பயணம் நாவலின் புனைகதைத் திறன் (செ.யோகராஜா), நீண்ட பயணம் நாவல் புனைதிறன் (ஆர்.எஸ்.சந்திரசேகர்) ஆகிய ஆறு கட்டுரைகளும்  இந்நாவல் பற்றி விரிவான திறனாய்வுப் பார்வையை வழங்குகின்றன.

ஏனைய பதிவுகள்

Enjoy Real money Online slots

Posts Gluey Signs Totally free Ports On the internet Play Cherry Threesome Position Game For real Money Possibility Genuine Payouts California is one of popular