8732 தமிழும் நவீனத்துவத்தின் சவால்களும்.

சி.சிவசேகரம். இலங்கை: கலைப்பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (மட்டக்களப்பு: சென் ஜோசப் கத்தோலிக்க அச்சகம்).

iv, 26 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

முத்தமிழ் வித்தகரும் உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியருமான சுவாமி விபுலாநந்தர் தொடர்பான நினைவுப் பேருரை 1989 முதல் வருடம் தோறும் கிழக்குப் பல்கலைக்கழகத்தால் ஒழுங்குசெய்யப்பட்டு வருகின்றது. 14.12.2012இல் பேராதனைப் பல்கலைக்கழக ஓய்வுநிலைப் பேராசிரியரால் நிகழ்த்தப்பட்ட பதினாறாவது சுவாமி விபுலாநந்தர் நினைவுப்பேருரையின் நூல்வடிவம் இது. சுவாமி விபுலாநந்தர் தமிழைப் பற்றிக் கவலைகொண்டிருந்த காலத்திலிருந்ததை விடப் பெரிய சவால்களை மொழியின் புதிய தேவைகள் மட்டுமன்றிக் கல்வித்துறைச் சீரழிவும் ஊடகங்களின் மூலம் பரவும் மொழியின் துஷ்பிரயோகமும் நம்முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளதைக் கருத்திற்கொண்டே தனது வாதங்களை முன்வைத்திருக்கிறோர். தன் நோக்கம் குறிப்பான தீர்வு எதனையும் முன்வைப்பதை விட முக்கியமன சில பிரச்சினைகள் எவ்வாறான தீர்வுகளை வேண்டி நிற்கின்றன என்பதைத் தொட்டுக் காட்டுவதாகவே அமைந்தள்ளது என்கிறார் பேராசிரியர்.

ஏனைய பதிவுகள்