8737 திருவள்ளுவரும் சிக்மன் பிராய்டும்: காமத்துப்பால் சார்ந்த ஒப்பீடு.

செ.கணேசலிங்கன். சென்னை 26: குமரன் பதிப்பகம், 3(12) மெய்கை விநாயகர் தெரு, வடபழனி, 1வது பதிப்பு, 2009.(சென்னை : சிவம்ஸ்)

167 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12 சமீ.

வள்ளுவரின் நனவு-கனவு என்னும் எதிர்ச்சொற்கள் இந்நூலில் முதன்மை பெறுகின்றன. இவை திருக்குறள் 122வது அதிகாரத்தில் வருபவை. நனவு என்பதற்கு எதிர்ச்சொல்லாக சிக்மன் பிராய்டு கண்டுபிடித்த நனவிலி மனம் (unconscious mind) என்பது காமத்துப் பாலுக்குப் புது விளக்கம் தரும். இந்நூல் திருவள்ளுவரையும் சிக்மன் பிராய்டையும்  காமம் சார்ந்த கருத்துநிலைகளை வைத்து  21 இயல்களில் ஒப்பீடு செய்கின்றது. நூலாக்கம் பற்றிய குறிப்புகள், வள்ளுவரும் சிக்மன் பிராய்டும், உளவியல் ஆய்வு-நனவும் கனவும், பாலின்பம், காமக் குறியீடுகள், மனித மனம் நாடும் இன்பம், விழிப்பு மனம்-விழிப்பற்ற மனம், மனநலம் பற்றி, இந்திய நூலில் காமம்-காமசூத்திரம், கள்ளும் காமமும், இன்பம்-ஆக்கிரமிப்பு, ஆணவம் (இட், ஈகோ), காமமும் ஆக்கிரமிப்பும், வதையின்பம், சாவுணர்ச்சி-ஆழ்மன உணர்ச்சி, இருபிரிவுகள், கனவுகள் பற்றிய உண்மைகள், சிக்மன் பிராய்டு-சில குறிப்புகள், நனவும் கனவும்-காமத்துப்பால் ஒரு தனிப்பார்வை, காமத்துப்பால் -25 அதிகாரங்கள் ஆகிய தலைப்புகளின்கீழ் இந்நூல் விரிகின்றது.

ஏனைய பதிவுகள்

4 Lowest Deposit Casino British

Blogs Telegraph Customers Is Allege Such 100 percent free Bets And you may Bookie Offers For Euro 2024 | deposit 10 get 80 free casino

14468 சித்த மருத்துவம் 1986.

ஐ.ஜெபநாமகணேசன் (இதழாசிரியர்). யாழ்ப்பாணம்: சித்த மருத்துவ மாணவர் மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1986. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). iv, 53+(40) பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18.5 சமீ. இவ்விதழில்