8751 பொழிச்சல்: சிந்தலும் நறுக்கும்.

காசி ஆனந்தன். சென்னை: காசி ஆனந்தன், காசி ஆனந்தன் குடில், 4/202 ஈஸ்வரன் கோவில் தெரு, தையூர், கேளம்பாக்கம் 603103, 1வது பதிப்பு, நவம்பர் 2011. (சென்னை 600005: பாரதி அச்சகம்).

93 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 18×12 சமீ.

புதுக்கவிதை  எனப்படும் ஆக்கம், கவிதை (பா) இலக்கியமே அல்ல என மறுத்துரைக்கும் காசி ஆனந்தன், அதில் உரைக் கிறுக்கல்களாய் பல இருந்தாலும் ஒரு சில படைப்பாக்கங்கள் மிக உயர்வான உரை இலக்கியமே என்கிறார். பொழிச்சல் இலக்கியம் என இதனை அழைக்கும் காசி ஆனந்தன் சிந்தல், நறுக்கு, என இரு வடிவம் கொண்டு பொழிச்சல் இலக்கியம் நிலைகொள்கின்றது என்கிறார். காசி ஆனந்தனின் தனித்துவமான இலக்கியப் பார்வையையும் ஆழமான இலக்கியப் பேராற்றலையும் காலம் காலமாய்ப் போராட்டங்களின் நடுவிலும் இலக்கியப் பரப்பில் களைப்பின்றித் தொடரும் கடும் உழைப்பையும் இந்நூலில் காணமுடிகின்றது. புதுக்கவிதையை உரை இலக்கியமாக இந்நூலின்வழியே சான்றாதாரங்களுடன் நிறுவுகின்றார். இது எளிய தமிழ்நடையில் அமைந்ததொரு தீவிர ஆய்வு நூல்.

ஏனைய பதிவுகள்

Jeux Pour Casino Variable

Content Devinette De jeu Prime De 200percent Les meilleurs Salle de jeu Concernant les Champions Canadiens Originel Prime Pour Amuser Vers Chicken Mystake Par ailleurs,