அப்துல் காதர் லெப்பை (மூலம்), அமீர் அலி (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxx, 130 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-358-7.
கல்வித்துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய காத்தான்குடிக் கவிஞர் அப்துல் காதர் லெப்பை (1913-1984) பிரபல ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் ஒருவர். மரபுக்கும் நவீனத்துவத்துக்கும் இணைப்புப் பாலமாக விளங்கியவர். இவரது சிந்தனை வளம் மிக்க ஐந்து கட்டுரைகளையும் கவித்துவம் மிக்க 20 கவிதைகளையும் இந்நூலில் தொகுத்துள்ளார் அமீர் அலி. 1960-70 காலகட்டத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள், பூரண வாழ்வு, இக்பாலின் தத்துவம்: தனித்துவம், இக்பாலின் சிந்தனைகள், சமூகவியற் பார்வையில் நடைமுறை இஸ்லாமும் நம்பிக்கைகளும், இலங்கை முஸ்லீம்கள்: சில குறிப்புகள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டவை. பதிப்பாசிரியர் அமீர் அலி, புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வருபவர். இலங்கையிலுள்ள அவரது நண்பர்களான அப்துல் ஹமீது, முஹம்மது ஜலீல் ஆகியொரின் துணையுடன் இத்தொகுப்பினை மேற்கொண்டுள்ளார். எம்.ஏ.நுஃமானின் முன்னுரையுடன் கூடியது.