8782 இளைஞன் எர்கையின் திருமணம்: சீனக் குறுநாவல்.

ஜௌ சூ லி (மூலம்), கே.கணேஷ் (தமிழாக்கம்).கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, வசந்தம், 44, 3வது மாடி, மத்திய சந்தைக் கூட்டுத் தொகுதி, இணைவெளியீடு, சென்னை 600002: சென்னை புக்ஸ், 6 தாயார் சாகிப் 2வது சந்து, 1வது பதிப்பு, மார்ச் 1990. (சென்னை 24: அலைகள் அச்சகம்).

48 பக்கம், விலை: இந்திய ரூபா 6., அளவு: 18×12.5 சமீ.

ஜௌ சூ லி திறன்மிக்க ஆற்றல்படைத்த சீன எழுத்தாளர்களில் ஒருவர். கொமிந்தாங் எதிரிப்படைகள் விரட்டப்பட்டு மக்களாட்சி நிறுவப்பட்டு விடுவிக்கப்பட்ட பகுதிகளின் வாழ்க்கைப் போக்கை இந்நாவலில் அவர் சித்திரித்துள்ளார். புதிய அபூர்வமான எண்ணங்களுக்கும் பிற்போக்கான நிலக்கிழார் முறையின் எண்ணங்களுக்குமிடையே தோன்றிய முரண்பாட்டுப் போராட்ட நிகழ்வுகளை நகைச்சுவையுடன் இக்குறுநாவலில் வரைந்துள்ளார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  86632).

ஏனைய பதிவுகள்