8788 மக்களின் மனிதன்.

சீநு ஆச்சுபே (Chinua Achebe) (ஆங்கில மூலம்), எஸ்.பொன்னுத்துரை (தமிழாக்கம்). சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு,  1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

232 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-81-89748-91-3.

Things Fall Apart, Arrows of God ஆகிய பிரபல்யமான நாவல்களின் ஆசிரியர் நைஜீரியாவின் இபோ இனத்தவரான சீநு ஆச்சுபே. அங்கு நடைபெற்ற முதலாவது இராணுவப் புரட்சியின் பின்னர் வெளிவந்த மக்களின் மனிதன் என்ற இந்த நாவல் நைஜீரிய மக்களிடையே ஒரு பரபரப்பினை ஏற்படுத்தியது. அரசியல்வாதிகளின் ஊழல்களை மிக நுட்பமாக இந்நாவல் நையாண்டி செய்கிறது. நைஜீரியாவிலிருந்து இபோ இன மக்களைக்கொண்ட பைஃபிரா நாடு 1967இல் தனியாகப் பிரிந்தது. உள்நாட்டுப்போர் நடந்தவேளை அவர் தாம் சார்ந்த இபோ இன மக்களின் தனித்துவ தேசியத்திற்கான ஆதரவாளராகச் செயற்பட்டார். இதன்மூலம் தனது இனத்தின் தனித்துவ அடையாளங்களிலே ஊன்றிய அக்கறையை  வெளிப்படுத்தினார். ஆனால் அரசியல் கட்சிகளிலே நிலவிய ஊழலினால் அவர் விரக்தி அடையநேர்ந்தது. அந்தவேளையில் ஆசிரியர் எழுதிய இந்நாவல் ஆபிரிக்க இலக்கியத்துக்குக் கிடைத்த ஆதாயமாகும். தடம்பதித்த ஆபிரிக்க இலக்கியப் படைப்புகள் தொடரில்  வெளிவரும் இரண்டாவது நூல் இதுவாகும்.

ஏனைய பதிவுகள்