க.சி.குலரத்தினம் (மூலம்). சோ.பத்மநாதன், கே.வி.குணசேகரம் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சைவ வித்தியாவிருத்திச் சங்கம், கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2010. (யாழ்ப்பாணம்: நோபிள் அச்சகம், 545, பருத்தித்துறை வீதி).
164 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.
யாழ்ப்பாணத்தில் வெளிவந்த முரசொலி பத்திரிகையில் க.சி.குலரத்தினம் 1988-89 காலகட்டத்தில் “இந்துபோர்ட் இராசரத்தினம்-வரலாறும் காலமும்’’ என்ற தலைப்பில் எழுதிய தொடரின் நூலுரு இதுவாகும். நல்லூர் ஆறுமுக நாவலர் ஆற்றிய கல்விப்பணியை முழுமூச்சுடன் பின்னாளில் விரிவாக முன்னெடுத்துச் சென்றவர் இந்துபோர்ட் இராசரத்தினம் அவர்கள். இவரது கல்விப்பணி விசாலமானது. கிராமங்கள் தோறும் 150க்கும் அதிகமான சைவப் பாடசாலைகளை நிறுவி, சைவாசிரியர்களையும் உருவாக்கியிருந்தார். சுவாமி விவேகானந்தர் நேரில் சந்தித்து வாழ்த்திய பெருமையைப் பெற்றவர். அவரது வாழ்வும் பணிகளும் இந்நூலில் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. Hindu Board என்ற இவ்வமைப்பு சமயத் தளத்தில் நின்று சமுதாயப் பணிகளில் -முக்கியமாக தமிழ்ப் பிரதேச கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றியது. ஆறுமுக நாவலர் தந்த கல்விப் புரட்சியைத் தொடர்ந்து தக்க வைத்தவர் இந்துபோர்ட் இராசரத்தினம் என்பது வரலாறு. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 217773).