8849 பெரியார் க.கனகரத்தினம் 1892-1962.

சு.சங்கரசிவம். கொழும்பு 3:  சு.சங்கரசிவம், 18 செல்சீயா கார்டின்ஸ், கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, டிசம்பர் 1962. (கொழும்பு 3: ஆர்.ஏ.நடேசன், நடராஜா அச்சகம்).

141+42 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15 சமீ.

இலங்கையின் சமூகசேவையாளர்களுள் ஒருவராக இருந்து மறைந்த பெரியார் திரு.க.கனகரத்தினம் அவர்களின் ஞாபகார்த்தமாக வெள்ளவத்தை இசைக்கலை மன்றம் வெளியிட்ட இந்நூல் பிரார்த்தனைப் பாடல்களையும், திரு க.கனகரத்தினம் அவர்கள் பற்றிய தமிழக- இலங்கை அரசியல் சமூகப்  பிரமுகர்கள் எழுதிய மலரும் நினைவுகளையும் கொண்ட நூல் இது. பாராளுமன்ற விவாதங்களிலிருந்து எடுக்கப்பட்ட  இவர் தொடர்பான பகுதிகள், பெரியாரைப்பற்றி மற்றவர்களின் அபிப்பிராயம், பத்திரிகைக்கு எழுதிய கடைசிக் கடிதம் ஆகியனவும் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. முன்னாள் இந்திய தூதுவர் வி.வி.கிரி, கைத்தொழில் உள்நாட்டு கலாசார அமைச்சர் மைத்திரிபால சேனாநாயக்க, சு.நடேசன், நீதியரசர் ரி.எஸ்.பெர்ணாண்டோ, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர் த.பொ.மீனாட்சி சுந்தரம், மதுரை ஆதீனம்  ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சுவாமிகள், பாராளுமன்ற உறுப்பினர்  டபிள்யூ. தகநாயக்க, முன்னாள் கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் எஸ்.ஹண்டி பேரின்பநாயகம், தமிழ் மறைக்கழகத் தலைவர் கா.பொ.இரத்தினம், அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் இராசா சேர் முத்தையாச் செட்டியார், சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவர் எம்.பி.பெரியசாமித் தூரன், கொழும்பு விவேகானந்த சபைத் தலைவர் இரா.சபாநாயகம், திருப்புகழ் மணி ரி.எம்.கிருஷ்ணசாமி ஐயர், முதலியார் செ.வினாசித்தம்பி, இந்து சாதனம் ஆசிரியர் நம.சிவப்பிரகாசம், பரமேஸ்வரா கல்லூரி அதிபர் எஸ்.சிவபாதசுந்தரம் உள்ளிட்ட 37 பிரமுகர்கள் இப்பெரியார் பற்றிய தமது கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள்.

ஏனைய பதிவுகள்

Better A real income Ports Online

Blogs Check out The newest Financial Section And pick In initial deposit Approach – investigate the site The Better Required Fast Detachment Gambling enterprises Gamble