8929 யேர்மனியில் தமிழர் வரலாறு.

மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்).

224 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

புகலிடத்தமிழர்களின் முதலாம் தலைமுறையினரின் புலப்பெயர்வு வரலாற்றைப் பதிவுசெய்யும் வரலாற்று முக்கியத்துவமான முயற்சியொன்று இந்நூலில் ஈடேறுகின்றது. இந்நூல் ஜேர்மன் நாட்டில் கால் பதித்த ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்துகின்றது.  ஜேர்மன் தமிழர் என்போர் யார்? ஐரோப்பியர் ஆட்சியில் தமிழர்கள், தமிழர்கள் ஏன் யேர்மனிக்கு வந்தனர்? யேர்மனியில் தமிழர்களின் ஆரம்பகால அகதிவாழ்வு, யேர்மனியில் தமிழர்களின் அரசியல் வேலைத்திட்டங்கள், யேர்மனியில் தமிழர்களின் கல்வி, யேர்மனியில் தமிழர்களின் சமயங்கள், யேர்மனியில் தமிழர்களின் விளையாட்டுத்துறை, யேர்மனியில் தமிழர்களின் கலை இலக்கியம், யேர்மனியில் தமிழர்களின் கலாச்சாரம், பண்பாடு, யேர்மனியில் தமிழ்த் தொழிலாளர்கள், தமிழ்ப் பெண்கள், சாதி அமைப்பு, யேர்மனியில் தமிழர்களின் எதிர்காலம் ஆகிய பன்னிரண்டு தலைப்புகளில்  விரிவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இளவாலையைச் சேர்ந்த நூலாசிரியர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சோஸ்ற் நகரில் வாழ்பவர். ஜேர்மனியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மன் தமிழ் கல்விச் சேவையில்இணைந்து நாவலர் தமிழ் பாடசாலைமூலம் புலம்பெயர்ந்த தமிழ்ச்சிறார்களின் தமிழ்வளர்ச்சிக்கு உதவிவருபவர்.

ஏனைய பதிவுகள்

Ett Utdannet Britisk Nettbasert Https

Content Bonuser Knyttet Til Enkelt Spill Finn De Beste Nye Spilleautomater Igang Nett Zoome Casino Beste Nye Norske Casinoer Påslåt Nett 2023 Nye Casinoer 2023