7055 அகவாசனை.

த.சிவப்பிரகாசம். கொழும்பு 6: த.சிவப்பிரகாசம், இல.44/4, 4/2 தர்மராம வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2011. (கொழும்பு: ஹரே அச்சகம்).

viii, 155 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 19.5×13.5 சமீ.

தம்பிப்பிள்ளை சிவப்பிரகாசம் அவர்களின் 16 ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. தான் பெற்ற ஆன்மீக ஞானம், தியானப் பயிற்சிகள், வாசிப்பு, சுயசிந்தனை, சுய பரிசோதனை, தன் வாழ்க்கை அனுபவங்கள், உரையாடிப்பெற்ற ஞானக்கருத்துக்கள் எனப் பலவழிகளிலும் உள்வாங்கப்பட்ட கருத்துக்களை இக்கட்டுரைகளில் பதிவுசெய்துள்ளார். வாசனையைத் தேடி, சந்தோஷம் உன் பிறப்புரிமை, இறைவன் ஆட்சி, மவுனமும் மவுன சக்தியும், எது சொந்தம், இருதய பராமரிப்பு, செருக்கும் பணிவும், கர்மாவும் விதியும், மனம்போல வாழ்வு, அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம், செம்மையான மனம், வாழும் கலையும் மரணிக்கும் கலையும், கூத்து முடியுமுன்பே, அப்பாவித்தனமும் புத்திசாலைத்தனமும், முழுவதும் உண்மை, அந்த அழகான பேட்டி ஆகிய தலைப்புகளில் இவை சுவையாகவும் எளிமையாகவும் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Gambling Exchanges Canada

Articles How much does The brand new Frozen Market Suggest Regarding the Betting Replace? And this You Wagering Sites Get the best Odds? Pony Race