7059 சிந்தனை செய்.

தெருத்தூசியோன் (இயற்பெயர்: சு.ஊ.ராஜ்குமார்). கொழும்பு 6: சு.ஊ.ராஜ்குமார், 2/21, ஹைலெவல் வீதி, கிருல்லப்பனை, 1வது பதிப்பு, நவம்பர் 2004. (கொழும்பு 6: S Print, 4C-1, Fussells Lane).

(4), 102 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14.5 சமீ.

இறைவன் ஒருவனே, வேற்றுமை வேண்டாம், வேலி வேண்டும், சிறார்கள் சீராக, போதையின் போக்கில், நாளையாவது ஆகியஆறு தலைப்புகளில் இந்நூல் சமூக விழிப்புணர்வுக் கட்டுரைகளைக் கொண்டுள்ளது. மாணவர்களை மையப்படுத்தி இந்நூல் எழுதப்பட்டிருப்பினும் ஆசிரியர்கள், பெற்றோர், அனைவருக்கும் இது இணைந்த பயனைக் கொடுக்கும். நூலாசிரியரைப்போன்று, விழிப்புலன் இழந்த ஒருவரால் பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வரை கடும் உழைப்பினால் படித்து முன்னேற முடியும் என்ற நம்பிக்கையை இக்கட்டுரைகள் ஊட்டுகின்றன.

இந்நூல் பாடசாலை மாணவர்களின் ஒழுக்கத்தைச் சீர்படுத்தி, மனதின் வலிமையை உணர்த்தும்வகையில் வெளிவந்திருக்கின்றது. சமூகத்தை நல்வழிப்படுத்தும் பாதை, பாடசாலையிலிருந்தே தொடங்கவேண்டும் என்பதை இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. இறைவன் ஒருவனே என்ற கட்டுரையில், மதங்கள் மனிதரைப் பிரித்தது என்றாலும் நெறியுள்ள வாழ்க்கைக்கு அதுவே வழியையும் வகுக்கின்றது என்கிறார். வேற்றுமை வேண்டாம் என்ற கட்டுரையில் இன்று இன,மத, மொழி சார்ந்ததாக அமைந்திருக்கும் நாட்டின் அபிவிருத்தியை மனித நேயத்தை மையமாகக் கொண்டு நகர்த்திச் செல்லவேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றார். போதையின் போக்கில் என்னும் கட்டுரை, இன்று இளையோரிடையே பெருகிவரும் போதைப்பொருள் பாவனையின் கேடுகள் பற்றித் தெளிவான செய்தியைத் தருகின்றது. வேலிவேண்டும், சிறார்கள் சீராக ஆகிய கட்டுரைகளும் மாணவர்களின் சுபீட்சமான வாழ்க்கை முறைக்கு வழிகாட்டுவதாகவே அமைந்துள்ளன. இன்றைய சமகால சமூகப்போக்கின் விளைவுகள் பாரதூரமானவையாக அமையும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ‘மாணவர்களே உங்கள் தவறான பாதையை மாற்றித் திருந்த முயற்சியுங்கள்’ என்று கூறுவதாகவே அனைத்துக் கட்டுரைகளும் அமைந்துள்ளன.

ஏனைய பதிவுகள்

Salle de jeu Rewards

Content Archive Minimal – Meilleures applications de casino Android Blackjack, Roulette , ! Jeu Avec Croupiers Rivalité Pourboire Les ecellents Casinos Un brin: Nos Sélections