7067 மானுட வாழ்வின் மகத்துவம்.

தம்பு துரைராசா (தொகுப்பாசிரியர்). தெகிவளை: தம்பு துரைராசா, 11/6, ரூபன் பீரிஸ் மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, டிசம்பர் 1999. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

(4), 170 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21.5×14 சமீ.

மானிட வாழ்வின் மகத்துவம் பற்றிய பல்வேறு விடயங்களையும் தொகுத்து ஒரு நூலில் வழங்க முனையும் முயற்சியாக உருவாக்கப்பட்ட இந்நூலில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. ஜோதிடக்கண் என்ற முதலாவது பகுதி ஆயர்பாடி ஜோதிடர் த.ம.இராமகிருஷ்ணன் ஜோதிடக்கண் திருமணம் என்னும் பொருளில் எழுதிய திருமணப் பொருத்தம் தொடர்பான சில நுணுக்கங்கள் அடங்கிய கட்டுரையைக் கொண்டது. இரண்டாவது பகுதியில், வீரகேசரி, தினக்குரல், தினமுரசு ஆகிய பத்திரிகைகளில் பிரசுரமானதும் மனித வாழ்க்கையின் மேம்பாட்டிற்காகவும் மண்ணில் நல்லவண்ணம் வாழவும் உதவும் கருத்துக்களடங்கிய சிந்தனைக் கோவையாகவும் அமைந்த விடயங்கள் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. மூன்றாவது பகுதியில் தமிழ்க் காதல்- என்ற தலைப்பில் சப்பிரகமுவ பல்கலைக்கழக மொழித்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் கனகசபாபதி நாகேஸ்வரன் எழுதிய இலக்கிய ஆய்வு இடம்பெற்றுள்ளது. குடும்ப  வாழ்வு, புரிந்துணர்வு, பழக்க வழக்கங்கள், ஆண்-பெண் கடமைகள், தாம்பத்தியம், உடலுறவு, மகப்பேறு, பெண்களது குணவியல்பு, கற்பு, பரத்தமை போன்ற தமிழிலக்கியமுனை நின்று இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 135306).

ஏனைய பதிவுகள்

Book Of Ra Automat Online Zdarma

Content Kann Ich Book Of Ra Kostenlos Und Ohne Anmeldung Spielen?: Power Stars Hack Slots Spiel online kann Ich Den Book Of Ra Magic Book