இராஜேஸ்வரி ஜெகானந்தகுரு. தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன், த.பெ.எண் 64, 1வது பதிப்பு, ஆவணி 2009. (தெகிவளை: காயத்திரி அச்சகம்).
xxx, 284 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14 சமீ.
மூன்று பிரிவுகளாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இந்நூலின் முதலாவது பிரிவில் விநாயகர், சிவன், சக்தி, குமரன், விஷ்ணு, வைரவர், சூரியன் போன்றோருக்காக சைவர்கள்அனுட்டிக்கும் விரதங்கள் பற்றி தனித்தனி 8 இயல்களில் கட்டுரைகளும், ஒன்பதாவது இயலில் விரதங்களும் விழாக்களும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டமும் இடம்பெறுகின்றன. இரண்டாம் பிரிவில் தமிழர் அனுஷ்டிக்கும் விழாக்கள், பண்டிகைகள் என்பவற்றைப் பற்றியும், மூன்றாவது பிரிவில் இந்துக்களுக்குத் தேவையான சில விளக்கங்கள், குருபூசை தினங்கள், பஞ்சபுராணம், கிழமைகளுக்குரிய தேவாரங்கள், சிவபுராணம் ஆகியவை தனித்தனி 5 இயல்களாகவும் விபரிக்கப்பட்டுள்ளன.