வெற்றிவேல் விநாயகமூர்த்தி. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2006. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).
104 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 17.5×12 சமீ.
மட்டக்களப்பு மாவட்டம் தந்த படைப்பாளி விநாயகமூர்த்தி தன் அகவை 82ஐ தாண்டிய நிலையில் வெளியிட்டுள்ள ஆன்மீகக் கட்டுரைகளின் தொகுப்பு இது. மனிதனும் மரணமும், சைவ நீதியும் சமய வாழ்வும், எழுமின் விழிமின், உள்ளக் கமலம் உரைத்தேன், ஆன்மா பரம்பொருளே, காஞ்சிபுரம் பட்டுப் புடவை, எம்பியும் தம்பியும், அறிவுக்கு நன்நெறிச் சிந்தனை அறுபது, மரணம் வருமுன் அறச்செயல், வாழ்வினாலே சாதியுண்டு, இறக்கும் வீடும் ஏழைக்குதவலாம், கோடி சேர்த்தவர் கொண்டுபோவரா? கூடுங்கொலையும் நாட்டு நிலையும், மனம் உடைய உயிரே ஆத்மாவாகும், உரிமை உடையோர் யார், பாடுபடாப் பணக்காரன், ஆய்வுச் சிந்தனை அறிவைப்பெறு, ஆண்டவர் பிறந்த மண் நூலுருவாக்கம் ஆகிய தலைப்புகளில் அமைந்த 18 கட்டுரைகள் இதில் இடம்பெற்றுள்ளன.