வசந்தா வைத்தியநாதன், க.இரகுபரன் (ஆலோசகர்கள்). காரைநகர்: ஆ.அம்பலவி முருகன், து.சுந்தரலிங்கம் (ஆதீனகர்த்தாக்கள்), ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜனவரி 2006. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிட்டெட், 48B, புளுமெண்டால் வீதி).
xxix, 96 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
சௌந்தராம்பிகை சமேத சுந்தரேஸ்வரரை மூலமூர்த்தியாகக்கொண்ட ஈழத்துச் சிதம்பரம் என்ற பெயர்பெற்ற இவ்வாலயத்தின் தேர்த்திருவிழா 1830ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றது. அவ்வகையில் புதிதாக உருவாக்கப்பட்டதொரு சிற்பத்தேரின் வெள்ளோட்டம் 10.01.2006 அன்று காரைநகரில் இடம்பெற்ற வேளையில் இம்மலர் வெளியிடப்பட்டது. மேற்படி காரைநகர் திண்ணபுரம் சிவன் கோவில் ஈழத்துச் சிதம்பர தேவஸ்தானம் பற்றியும், அதன் சிற்பத்தேர்த்திருப்பணி பற்றியும், பொதுவான சைவ சமய ஆலயங்களின் பண்புகள், திருப்பணிகள் பற்றியும் சைவசமயம் பற்றியும் எழுதப்பெற்ற பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பாக இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது.