சுவாமிநாதன் தர்மசீலன் (பதிப்பாசிரியர்). மானிப்பாய்: சுவாமிநாதன் தர்மசீலன், 3வது பதிப்பு, 1995, 1வது பதிப்பு, 1925, 2வது பதிப்பு, 1970. (கொழும்பு: வே.திருநீலகண்டன், லட்சுமி அச்சகம்).
(6), 50 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 50., அளவு: 22×14 சமீ.
1925இல் எழுதப்பட்ட இவ்வாலய மான்மியம் 1970இல் மீள்பதிப்பாக வெளியிடப்பட்டிருந்தது. 1995இல் மீளப்பதிப்பிக்கப்பட்டுள்ள இந்நூலில் 1970இல் எழுதப்பட்ட முகவுரை, சிறப்புரை ஆகியவற்றுடன் 1995இல் எழுதிய இதய வாசல், சிறப்புரைகள் ஆகியனவும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆலய வரலாற்றைக்கூறும் இந்நூலின் பிரதான அத்தியாயங்களாக மகான் அடக்கம், போர்த்துக்கேயர் காலம், ஆலய உற்பத்தி, திருப்பணி வேலைகள், கோவிற் பூசகரும் தருமகர்த்தாக்களும், விநாயகர் சீர்பரவல், வாழ்த்துக் கவி, விநாயகர் கும்மி, வினைகளை வேரோடறுக்கும் விநாயகப் பெருமான், நூற்பயன் ஆகிய 10 அத்தியாயங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 479737).