தொனமூர் ஆணைக்குழு. இலங்கை: அரசகருமமொழி வெளியீட்டுக்கிளை, கொழும்பு, 2வது பதிப்பு, 1967, 1வது பதிப்பு, 1961. (கொழும்பு: இலங்கை அரசாங்க அச்சகம்).
viii, 262 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.
தொனமூர் ஆணைக்குழு என்று பொதுவாகக் குறிக்கப்படும் சிறப்பாணைக்குழு தொனமூர் ஏள் (P.C.K.P.) அவர்களைத் தலைவராகவும், சேர். மதியூ நேதன் P.C.(Ire),G.C.M.G., சேர் செபிரி பட்டிலர் K.B.E.,M.P., கலா.ரி.திரமன் சீல்சு M.C., M.P., ஆகியோரை பிற அங்கத்தவர்களாகவும் கொண்டும் அமைக்கப்பட்டிருந்தது. குடியேற்ற நாட்டலுவலகத்தைச் சேர்ந்த திரு பி.ஏ.கிளற்றர்பக்கு M.C., அவர்கள் ஆணைக்குழுவின் செயலாளராகவும், இறைசேரியைச் சேர்ந்த திரு W.C.பாட்டில், அலுவல்முறை அறிவிப்பாளராகவும் பணியாற்றியிருந்தனர். 11 அதிகாரங்களில் அமைந்துள்ள இவ்வறிக்கையில், முன்னுரை, விரிவுரையும் வரலாறும், இப்பொழுதுள்ள யாப்பு இயங்கியவாறு, மத்திய அரசாங்கம், வாக்குரிமையும் பிரதிநிதித்துவமும், கண்டியர் உரிமை, உள்ளுராட்சி, குடியியற் சேவையும் பொதுச் சேவையும், ஒழிபியல், எடுத்துரைப்பின் சுருக்கம், நன்றிகூறல் ஆகிய பிரிவுகள் அடங்கியுள்ளன. பின்னிணைப்பாக, பயண விபரம், சான்றுகள் வரிசை, அரசாங்கத் திணைக்கள வரிசை, குடித்தொகைப் புள்ளிவிபரம், வருவாயும் செலவும், கப்பலோட்டம், ஏற்றுமதி இறக்குமதி, கல்வியும் பயிர்ச்செய்கையும், 1815ஆம் ஆண்டு மார்ச் 2ம் நாள் கண்டியர் சமவாயம், 1818ஆம் ஆண்டு நவம்பர் 21அம் நாள் அரசாங்கப் பிரகடனம், நிதித்திணைக்களத்தின் கடமைகள், பிரியாவிடை முடங்கல் ஆகிய பகுதிகள் தரப்பட்டுள்ளன.