சு.வித்தியானந்தன் (பதிப்பாசிரியர்), மன்னார்: மன்னார் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வெளியீடு, 1வது பதிப்பு, 1966. (யாழ்ப்பாணம்: தி.ச.வரதராஜன், ஆனந்தா அச்சகம்).
xii, 117 பக்கம், விலை: ரூபா 2., அளவு: 21.5×14 சமீ.
மன்னாரைச் சேர்ந்த கத்தோலிக்க நாட்டுக்கூத்துப் பிரதியின் நூலுருவாக்கம் இதுவாகும். தேவபாலன் பெத்தலேம் ஊரில் பிறப்பாரென்று வேத சாஸ்திரங்களிற் கண்டறிந்து அவரைத் தரிசிக்கத் தத்தம் நாடுகளிலிருந்து பரிவாரங்களுடன் புறப்படும் வெலிச்சோர், கஸ்பாறு, வலத்திசார் ஆகிய மன்னர்கள் பற்றியது இந்நாடகம். மன்னார் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வெளியீட்டுத் தொடரில் இரண்டாவது பிரசுரம் இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10295).