7253 வன்னி நாய்ச்சிமார் மான்மியம்.

த.சண்முகசுந்தரம். தெல்லிப்பளை: அருள் வெளியீட்டகம், மாவைக் கந்தசுவாமி கோவிலடி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1981. (காங்கேசன்துறை: சந்திரா அச்சகம்).

(2), 22 பக்கம், விலை: ரூபா 3., அளவு: 18.5×12.5 சமீ.

மறுமலர்ச்சிப் பாதையில் மக்கள் கலைகள் என்ற தொடரில் வெளிவந்த நான்காவது நூல் இதுவாகும். தல மகிமையைக் கூறும் நூல்கள் மான்மியம் என்றழைக்கப்படும். இது  பிரதேச வரலாற்றை மாத்திரமின்றி அப்பிரதேசத்துக் கோவிலில் எழுந்தருளியிருக்கும் கடவுளரையும் பாடக் குறிப்பிடப்பட்டது. பின்னாளில்  அப்பிரதேசத்துக் குடிமகனைப் புகழ்ந்து பாடவும் மான்மியம் பயன்பட்டது. பொன்னம்பல மான்மியம், அருணாசல மான்மியம் என இப்பரப்பு விரிந்தது. அவ்வகையில் ஈழத்து நாட்டார் இலக்கியமான வன்னி நாய்ச்சியார் மான்மியம் வன்னிப் பிரதேசத்தின் பெருமையையும் வன்னிமைகளின் மனைவியரின் பெருமைகளையும் அப்பிரதேசத்தில் வழக்கிலுள்ள நாய்ச்சிமார் வழிபாடு பற்றியும் பேசுகின்றது. (The Glory of Vanni Chieftains’ wives).

ஏனைய பதிவுகள்

13983 இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள்-2: கி.பி. 1300-1900.

சி.பத்மநாதன். கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2013. (கொழும்பு 13: அனுஷ் பிரின்டர்ஸ்). xvi, 644 பக்கம், வண்ணப் புகைப்படத்

13936 ஞானம்: ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ்.

தி.ஞானசேகரன்; (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46வது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜுன் 2018. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 292 பக்கம், விலை: ரூபா 500.,

11740 கிரேக்க நாடகாசிரியர் யூரிப்பைடசின் நாடகங்கள்: இரண்டாவது பகுதி.

யூரிப்பைடஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, கார்த்திகை 1990. (கனடா: ரிப்ளெக்ஸ்