7268 பிற்கால இலக்கண மாற்றங்கள் (எழுத்து).

க.வீரகத்தி (மூலம்), மு.கௌரிகாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் அச்சகம்;, 39, 36ஆவது ஒழுங்கை).

xvi, 261 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-273-3.

இந்த நூல் வரலாற்று மொழியியலின்பாற்பட்டது. தொல்காப்பியம், விரசோழியம், நேமிநாதம். நன்னூல், இலக்கண விளக்கம், பிரயோக விவேகம், இலக்கணக்கொத்து, தொன்னூல் விளக்கம், முத்து வீரியம், சுவாமிநாதம், அறுவகை இலக்கணம் எனும் நூல்களை மூலங்களாகக் கொண்டு ஆசிரியர் ஆராய்ந்து இந்நூலை எழுதியுள்ளார். இலக்கணத்தைச் சுருக்கமாகவேனும் பயின்றவர்கள் தமிழ்மொழி ஆசிரியர்களின் உதவியின்றி புத்தம்பதிய பார்வையுடன் தமிழ் இலக்கணத்தைக் கற்பதற்கானதொரு நல்ல வழிகாட்டியாக இது விளங்குகின்றது. யாழ்.கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட க.வீரகத்தி (1922-1996) அவர்கள் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் சிறப்பாய்வாளராக 1983-1986 காலகட்டத்தில் பணியாற்றிய வேளையில் 15.6.1986இல் சமர்ப்பித்த பிற்கால இலக்கண மாற்றங்கள் (எழுத்து) என்ற ஆய்வின் நூல்வடிவம் இதுவாகும். பதிப்பாசிரியர் கௌரிகாந்தன், ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பண்டிதர் வீரகத்தியிடம் பல்லாண்டுகள் குரு-சீட முறையிலே இலக்கணங் கற்றவர். பண்டிதர் வீரகத்தியின் மறைவின் பின்னர் அவரது இறுதிக்கால வேண்டுகோளையேற்று இவ்வாய்வை நூலுருவாக்கியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

9 Masks Of Fire Hyperspins Pokie

Content Masks Of Fire Hyperspins Masks Of Fire Hyperspins Slot Faqs Juega A 9 Masks Of Fire Gratis En Modo Beizebu Alguns power-ups também podem