M.K.பீரிஸ், A.J.குணவர்த்தன (மூலம்), G.J.விஜயசேன, W.M.பியதாச, H.R.N.ஜயசேகர, J.A.S.ஜயலத், K.D.D. பேர்சிவல், P.கபிரியேல், S.சிவப்பிரகாசம் (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1988. (கொழும்பு: Pacific Press).
60 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதக் கல்வி என்ற கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். தசமங்களைத் தெரிந்துகொள்வோம், தசமங்களுக்கும் சர்வதேச அலகுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ஒப்பிட்டு ஆராய்தல், தசமங்களில் கணிதச் செய்கை, மீளுந் தசமங்கள், தசமத்தின் வர்க்கமூலத்தைக் காணல் ஆகிய ஐந்து பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.