E.M.G.ஏக்கநாயக்க (மூலம்), A.J.குணவர்த்தன, G.J..விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, E.A.T. ஏக்கநாயக்க, A.R.பெர்னாந்து, D.J.வனசிங்க, K.D.D.பர்சிவல், M.அப்துல் வாஹிது (பாடப்பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).
52 பக்கம், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.
தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணித-விஞ்ஞானக் கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். தொடைகள் பற்றிய எண்ணக்கருவும் குறியீடுகளும், வென் உருவங்கள், தொடைகளின் பல்வேறு தன்மைகள், தொடைகளின் கணிதச் செய்கைகள், தொடைகளிலான உத்திக் கணக்குகளின் தீர்வுகள் ஆகிய ஐந்து பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.