7331 முறைசார் நிறுவல்.

W.M.பியதாச (மூலம்), A.J.குணவர்த்தன, G.J.விஜயசேன, M.P.ஏக்கநாயக்க, P.A.C.S பெரேரா, K.சிவலோகநாதன் (பாடப்பதிப்பாசிரியர்கள்).  கொழும்பு: தொலைக்கல்வி நிறுவகம், தேசியக் கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1989. (கொழும்பு: Pacific Press).

40 பக்கம், சித்திரங்கள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

தொலைக்கல்வி ஆசிரிய மாணவர்களுக்கான கணிதக் கல்வி என்ற  கல்விப் பயிற்சிநெறி மொடியூல்களில் ஒன்றாக வெளியிடப்பட்ட நூல். நீங்கள் தெரிந்திருக்கவேண்டிய சில அடிப்படை உண்மைகள், முறைசார் நிறுவல், பல்கோணியின் கோணங்கள் தொடர்பான தேற்றங்களின் நிறுவல், ஒருங்கிசைவு தொடர்பான பிரசினங்கள், இணைகரம் மீதான தேற்றங்கள், நடுப்புள்ளித் தேற்றம் ஆகிய ஆறு பிரிவுகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

8600 கால நதி.

காவலூர் எஸ்.ஜெகநாதன், கணபதி கணேசன், ஏ.எஸ்.உபைத்துல்லா. கொழும்பு: பா.தவபாலன், செவ்வந்தி பிரசுரம், இலங்கை சட்டக் கல்லூரி, 1வது பதிப்பு, ஜுன் 1978. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம்). (4), 48 பக்கம், விலை: ரூபா 2.00,