தேவராஜன் ஜெயராமன். கண்டி 20000: பவளரத்ன பப்ளிகேஷன்ஸ், 396/12B, பேராதனை வீதி, 3வது பதிப்பு, ஜுலை 2005, 1வது பதிப்பு, டிசம்பர் 1993, 2வது பதிப்பு, டிசம்பர் 2000. (கொழும்பு 15: கலர் பிரின்ட், 712, புளுமெண்டால் வீதி).
(6), 84 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-97027-1-8.
இந்நூல் முகாமைசாராத ஊழியர்களுக்கு (Non-Managerial Employees) அலுவலக முகாமை சம்பந்தமான அடிப்படை அறிவினை வழங்குகின்றது. அலுவலகம் எங்கு அமைக்கப்படல் வேண்டும், அலுவலகத்தின் அமைப்பு, பாதுகாப்பு, அலுவலகத்தை எவ்வாறு ஒழுங்கமைப்பது, அமைப்பு வரைபடம், அலுவலகத் தளபாடங்கள், உங்கள் மேசையை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, நேரமுகாமைத்துவம், கூட்டங்களை எவ்வாறு முகாமை செய்வது, அலுவலகத்தில் அமைதியினைப் பேணல், தொடர்பாடலை மேற்கொள்ளல், கீழ்நோக்கிய தொடர்பாடல், ஊழியர்களை வழிநடத்துதல், ஊழியர்களைக் கையாளல், பின்னூட்டி வழங்கல், பொதுத் தொடர்புகள், ஊழியர்களின் வரவின்மை, அலுவலகத்தின் தள அமைப்பு, கடிதம், கோவைப்படுத்தல் முறை, அதற்கான உபகரணங்கள், ஊக்கப்படுத்துதல், வாடிக்கையாளர் சேவையும் அவர்களின் திருப்தியும், ஒழுங்குவரிசையை முகாமைசெய்தல், வாடிக்கையாளர் முறைப்பாடுகளை முகாமைசெய்தல், மன அழுத்தங்களை முகாமைசெய்தல், ஆபத்து நிலைமைகளில் நிறுவனத்தை முகாமை செய்தல், பொது மேடைப் பேச்சு ஆகியன உள்ளிட்ட 29 தலைப்புகளின்கீழ் முகாமைத்துவ விடயங்கள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகததின் முகாமைத்துவத் துறையின் முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளராவார். (இந்நூல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 603912).