7453 கலை இலக்கியக் களஞ்சியம்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

vii, 126 பக்கம், விலை: ரூபா 340., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-1857-89-9.

கலை இலக்கியக் களஞ்சியம்.

சபா.ஜெயராசா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 2வது பதிப்பு, 2017, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 11: சேமமடு பதிப்பகம்).

vi, 134 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1857-89-9.

சமகாலத்தில் கலை இலக்கியம் தொடர்பான ஆய்வுகளின் பிரவாகம் புதிய பல கலைச்சொற்களினதும் கோட்பாடுகளினதும் ஆக்கங்களோடு இணைந்து எழுச்சிகொள்ளத் தொடங்கியுள்ளது. நவீன கலை இலக்கியத்தில் பயின்று வரும் பெருவாரியான கலைச்சொற்கள் ஒருசேரத் தொகுக்கப்பட்டு நூல்வடிவில் தமிழில் வெளியிடும் முயற்சியாக இது அமைந்துள்ளது. கலை இலக்கியங்களில் நிகழ்ந்துவரும் புதிய கருத்தாடல்களை புரிந்துகொள்வதற்குரிய ஆற்றுப்படுத்தல் ஆக்கமாகவும் இந்நூல் அமைந்துள்ளது. பொருத்தமான எடுத்துக்காட்டுகள் விளக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

ஏனைய பதிவுகள்