நபீல் (இயற்பெயர்: றிஸ்வியூ முஹம்மத் நபீல்). சென்னை 600018: உயிர்மை பதிப்பகம், 11/29, சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 600005: மணி ஆப்செட்).
104 பக்கம், விலை: இந்திய ரூபா 60., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-80072-85-2.
நபீல் இலங்கையின் தென்கிழக்கில் கல்முனையில் 1967இல் பிறந்தவர். கொழும்புப் பல்கலைக் கழகத்தில் இதழியல் கற்கைநெறியில் டிப்ளோமா பட்டம் பெற்றவர். கொழும்பு துறைமுகத்தில் பணிபுரிந்துவரும் இவர் சுதந்திர இலக்கிய விழா, விபவி படைப்பிலக்கியம், உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்பவற்றில் விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பகுதிநேர அறிவிப்பாளராகவும் பணியாற்றிவரும் நபீல் எழுதிய கவிதைத் தொகுதி இது.