ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், கந்தசாமி கோவிலடி, இணுவில், சுன்னாகம், 4வது பதிப்பு, பெப்ரவரி 2012, முன்னைய பதிப்பு விபரம் தரப்படவில்லை. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).
44 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 20×14.5 சமீ.
கும்பாபிஷேகம், மதலிய கிரியைகளில் இடம்பெறும் தனித்தனிக் கிரியைகளுக்கான பொருட்களின் பட்டோலை இதுவாகும். ஒவ்வொரு கிரியைக்கும் தனித்தனியாகப் பட்டோலை தரப்பட்டுள்ளது. முக்கியமாக அந்த இடத்தில் மண்டபம் அமையவேண்டிய முறை, போடவேண்டிய கோலங்கள் முதலியனவும் தரப்பட்டுள்ளன. பட்டோலை எனக் குறிப்பிட்டபோதிலும் இங்கு பொருட்களின் எண்ணிக்கை அல்லது அளவுப்பிரமாணம் விபரமாகக் கொடுக்கப்படவில்லை. இது தேவைக்கேற்ப மாறும் என்பதால் கிரியைகளின் தன்மை இடவசதியைப் போறுத்து உரிய குருவானவர் அளவுகளைத் திட்டமிட இந்நூல் உதவுகின்றது.