ப.சிவானந்த சர்மா (புனைபெயர்: கோப்பாய் சிவம்). யாழ்ப்பாணம்: சர்வானந்தமய பீடம், இணுவில், 1வது பதிப்பு, 2011. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).
24 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.
வித்யாபூஷணம், பிரம்மஸ்ரீ ப.சிவானந்த சர்மா அவர்களால் தொகுக்கப்பெற்ற இந்நூலில் சங்கடஹர சதுர்த்தி விரதம் என்றால் என்ன, அது ஏன் எப்படி அனுஷ்டிக்கப்படுகின்றது, விரதம் பற்றிய சில விளக்கங்களும் விதிமுறைகளும், விரதத்தின் பின்புலமாக அமைந்த புராணக்கதை என்பனவும் விபரிக்கப்பட்டுள்ளன. நூலின் பிற்பகுதி சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது.