8147 சைவ சமய தரிசனம்.

இராசையா ஸ்ரீதரன். யாழ்ப்பாணம்: இ.ஸ்ரீதரன், 291, நாவலர் வீதி, ஆனைப்பந்தி, 1வது பதிப்பு, 2011. (யாழ்ப்பாணம்: கொழும்பு பிரிண்டர்ஸ்).

(22), 148 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 325., அளவு: 20×14.5 சமீ.

அகில இலங்கை சைவப் புலவர்கள் சங்கத்தின் அறநெறி ஆசிரியரும், யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபை, அகில இலங்கைத் திருமுறை மன்றம் ஆகியவற்றின் உறுப்பினரும், நல்லை திருஞான சம்பந்தர் ஆதீன சமயப் பிரசாரகருமான இராசையா ஸ்ரீதரன் அவர்களின் சைவசமயக் கட்டுரைகளின் தொகுப்பு இது. இந்நூல் 35 கட்டுரைகளைக் கொண்டது. விக்கினம் தீர்க்கும் விநாயகப் பெருமான், ஆவணிச் சதுர்த்தி விரதம், ஞானக்கண் போன்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள இக்கட்டுரைகளில் ஆவணிச் சதுர்த்தி விரதம், மற்றும் சிவராத்திரி, நவராத்திரி, கேதார கௌரி, கந்த சஷ்டி விரதங்கள், வரலட்சுமி விரதம், மாசிமக விரதம், ஆடி அமாவாசை, வைகுண்ட ஏகாதசி விரதம் போன்ற விரத மகிமைகளையும் அனுஷ்டானங்களையும்  விளக்கும் கட்டுரைகளும், விநாயகப் பெருமான், முருகன், ஐஸ்வர்ய மகாலட்சுமி, லட்சுமிதேவி, கண்ணன் போன்ற தெய்வ மகிமைகளையும், யோகர் சுவாமிகள், ஆறுமுக நாவலர், நல்லை ஆதீன குரு முதல்வர், நாயன்மார்கள் போன்றோர் பற்றிய  வாழ்வும் பணியும் பற்றிய கட்டுரைகளும், பொதுவான சமய அறிவூட்டும் கருத்துக்களைக்கொண்ட கட்டுரைகளும் அடங்குகின்றன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 221221).

ஏனைய பதிவுகள்