8702 இலக்கியச் சிந்தனைத் தடங்கள்.

ச.தனஞ்சயராசசிங்கம்(மூலம்), முருகேசு கௌரிகாந்தன் (பதிப்பாசிரியர்).  கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xii, 132 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-377-8.

பேராசிரியர் ச.தனஞ்சயராசசிங்கம் (1933-1977) பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேர்ந்தவர். வித்தியாலங்கார வளாகத்தின் தமிழ், இந்துப் பண்பாட்டுத் துறையின் தலைவராக விளங்கியவர். சமயம், தமிழ் இலக்கியம்; போன்ற விடயங்களில் இவர் எழுதிய 18 கட்டுரைகளைத் தேடித் தொகுத்து வழங்கியுள்ளார் பதிப்பாசிரியர் முருகேசு கௌரிகாந்தன். சங்ககாலத் தொகை நூல்களின் அகத்திணை மரபு, சிலப்பதிகாரமும் சங்க இலக்கியமும், கோவலன்- சோக நாடகத்தின் தலைவன், தமிழ்க் காப்பியங்களில் நாடகக் குறிப்புச் சுவை, பல்லவர் காலத்துப் பக்தி இலக்கியம், சுந்தரர் கவித்திறன், திருவாசகர் கையாண்ட பிரபந்தங்கள், நீத்தல் விண்ணப்பத்தில் உவமைச் சிறப்பு, மறைந்த தமிழ்க் காப்பியங்கள், சோழர்காலப்  பெருங்காப்பியங்கள், சோழர்காலக் காப்பிய வளர்ச்சி, பொருவில் அன்புருவம், சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம், ஒரு திருமுருகன் வந்து ஆங்கு உதித்தனன் உலகம் உய்ய, நடமாடிய தமிழ்ப் பல்கலைக்கழகம்: டாக்டர் உ.வே.சாமிநாதையர், திரு வி.க.வின் தமிழ்ப்பணி, கி.வா.ஜகந்நாதனின் எழுத்தும் பேச்சும், மதங்க சூளாமணி, ஓரிற் பிச்சை ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. மு. கௌரிகாந்தன் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் கலைமாணிப்பட்டம் பெற்றவர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதுகலைமாணிப்பட்டத்தினைப் பெற்றவர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

ஏனைய பதிவுகள்

17780 நடுநிசி நரிகள்: சமூக (மர்ம)நாவல்.

வெலிவிட்ட ஏ.சி.ஜரீனா முஸ்தபா. கடுவெல: ஏ.சி.ஜரீனா முஸ்தபா, 120 H, போகஹவத்த வீதி, வெலிவிட்ட, 1வது பதிப்பு, ஏப்ரல் 2021. (புத்தளம்: டிசைன் ஓகே அச்சகம்). xvii, 157 பக்கம், விலை: ரூபா 450.,

«Рождественский миллионер»: как увеличить возможности на одержать верх Новости Медиакомпания

Content Приобретение билетов диалоговый Как отъюстировать авиабилет по QR коду Российское игра: обыкновения, хозяйничала а также заманчивые факторы игры Полезная информация в области игре Русское