9305 ஒம்புட்சுமானின் பணி.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் (ஆங்கில மூலம்), சே.ரவீந்திரன் (தமிழாக்கம்).  கொழும்பு 7: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 32/3, பிளவர் வீதி, 1வது பதிப்பு, பங்குனி 1999. (கொழும்பு 10: குளோப் பிரிண்டிங் வேர்க்ஸ்).

80 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 955-8037-11-7.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்  கொழும்பு  BMICH மண்டபத்தில்  1998 ஏப்ரல் 24இல் ஒழுங்கு செய்த ஒரு மாநாட்டின் பின்னணியில் எழுதப்பட்ட நூல் இது. முன்னுரை, அறிமுகம், இலங்கையின் நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்சுமான்), ஒம்புட்சுமானின் பணி தொடர்பான கலந்துரையாடலின் நடவடிக்கைகள், சுவீடனில் ஒம்புட்சுமானின் பங்கு, இலங்கையில் ஒம்புட்சுமானின் பங்கு பற்றிய ஒரு கண்டன ஆய்வும் தென்னாபிரிக்காவுடன் சில ஒப்பீடுகளும், குழு ஆய்வரங்கு ஆகிய பிரிவுகளின் கீழ் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூலின் பின்னிணைப்புகளாக நிருவாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரின் பதவியை உருவாக்கிய அரசியல் அமைப்பின் உறுப்புரை 156, 1981ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க, நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டம், 1991ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (திருத்தச்) சட்டம்,  1994ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (திருத்தச்) சட்டம்,  நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளரின் 1995, 1996, 1997 ஆம் ஆண்டுகளின் ஆண்டறிக்கையின் சில பகுதிகள், தென்னாபிரிக்காவின் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகிய ஆறு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 25583).

ஏனைய பதிவுகள்

Android os and you can Iphone

Blogs Versatile Agreements Low prices Do you Help me to Install My personal Iphone 3gs? Understanding the Impact Away from Bad credit To your Cellular

Utwórz Nowoczesną Stronę Po Iis 5

Content Sprawdź tych gości – Najistotniejsze Przeraźliwe Strony internetowe, Ażeby Przestraszyć Znajomych Dołącz Witrynę Do odwiedzenia Microsoft Edge Gdy Zamontować Google Search Console? Oszczep Website