9309 சூழலும் அபிவிருத்தியும்: நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி பற்றிய எண்ணங்களும் அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளும்.

மா.செ.மூக்கையா. திருச்சிராப்பள்ளி 5: பார்த்திபன் வெளியீடு, திருவானைக் கோவில், 1வது பதிப்பு, 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xiii, 170 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

இயற்கைச் சூழலைப் பற்றியும், மனித நடவடிக்கைகளினால் அது மாசுறுவது பற்றியும் பல சர்வதேச மாநாடுகள் நடத்தப்பட்டுள்ளதோடு அவற்றில் ஆராயப்பட்ட விடயங்கள் அறிக்கைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளன. இவை பற்றிய சில கருத்துக்களை இந்நூலில் ஆசிரியர் 16 கட்டுரைகளாக வழங்கியுள்ளார். சூழலும் அபிவிருத்தியும் பற்றிய சிந்தனைகள்,  நிலம் மாசுபடுவதால் ஏற்படும் சூழல் பிரச்சினைகள், வளி மாசடைதல் சார்ந்த பிரச்சினைகள், கடற் பிரதேசங்களில் சூழல் மாசாக்கம், விவசாய மூலவளங்கள் சார்ந்த சுழல் பிரச்சினைகள், விருத்திபெறும் நாடுகளின் சூழல் பிரச்சினைகளும் வடக்கின் பங்களிப்பும், வளிமாசடைதல்- இலங்கையின் அனுபவங்கள், தென்னாசிய நாடுகளின் அபிவிருத்திப் போக்குகள், விருத்திபெறும் நாடுகளும் விவசாய கொள்கை மாற்றங்களும்-வங்காள தேசத்தின் அனுபவங்கள், அபிவிருத்தியும் சுகாதார சேவைகளின் வளர்ச்சியும், குறைவிருத்தியும் குறைந்த வாழ்க்கைத்தரத்தின் பரிமாணங்களும், விருத்தியுற்ற நாடுகளின் விவசாயக் கொள்கைகள், உலக வங்கியும் குறைவிருத்தி நாடுகளின் விவசாய அபிவிருத்தியும், வர்த்தகம், வரி என்பவற்றிற்கான பொது ஒப்பந்தமும் வர்த்தக பேரங்களும், விருத்திபெறும் நாடுகளிலிருந்து மருத்துவர்களின் வெளியேற்றம்-ஒரு மூலவள விரயம், இலங்கையில் சுதந்திர வர்த்தக வலயங்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஆகிய தலைப்புகளில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரான நூலாசிரியர், வவுனியா, வடமாகாண இணைந்த பல்கலைக்கழகக் கல்லூரியின் பணிப்பாளராகவும் பணியாற்றியவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16041).

ஏனைய பதிவுகள்

Slots Bei Igt

Content Aufführen Die leser Reichlich 16 000 Kostenlose Casinospiele In Ihr Spielhalle Bimbes Gewinnen Gebührenfrei Roulette Spiele Seit Zu welcher zeit Gibt Sera Slots and

Casino online dinero real sin tanque

Content ¿En los primero es antes otros casos las casinos en línea reparten bonos de casino carente tanque? ¿Â qué es lo primero? serí­a cualquier