9338 மங்கல தரிசனம்: சைவசமய மங்கலச் சடங்குகள்.

ஆய்வுப் பிரிவு. கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2007. (கொழும்பு 13: கௌரி அச்சகம், இல. 207, சேர் இரத்தினஜோதி சரவணமுத்து மாவத்தை).

viii, 77 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

இந்துக்கள் தம் பிறவிப் பயனை அடைதற் பொருட்டு மேற்கொள்ளும் கிரியைகளை பூர்வம், அபரம் என இரண்டாக வகுக்கின்றனர். பூர்வக் கிரியைகள் பிறப்பு முதல் திருமணம் வரையாகச் செய்யப்படுபவை. அபரக்கிரியைகள் மரணத்தின் பின்னர் செய்யப்படுபவை. இந்நூல் இந்துக்கள் கடைப்பிடித்து  ஒழுகும் பூர்வக் கிரியைகள் பற்றிக் கூறுகின்றது. சாந்தி முகூர்த்தம், பிள்ளைப்பேறு, துடக்குக் கழிவு, பெயரிடுதல், குழந்தையைக் கோயிலுக்குக் கொண்டு போதல், காது குத்துதல், சோறூட்டல், முதற் பல் முளைத்தல், ஏடு தொடக்குதல், தீட்சை, பூப்புனித நீராட்டு, திருமண நிச்சயம், திருமணப்பதிவு, பொன்னுருக்கல், மணப்பந்தல் என இன்னோரன்ன கிரியைகள் பற்றியும் இக்கிரியைகள் ஆற்றப்படும் முறை, அதற்கான காரணம் என்பனவற்றை விளக்கமாகக் கூறும் வகையில் அமைந்துள்ளது. மேலும், பல்வேறு விழாக்கள், மங்கல கிரியைகளுக்குப் பயன்படும்பொருட்களும் விளக்கங்களும், தேங்காய் உடைப்பதன் தத்துவம் ஆகியனவும்  விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நூலின் பிற்பகுதியில் திருமுறை வழிபாட்டுக்கு ஏற்ற திருமுறைகளும், மங்கள வழக்குகள் பற்றி கண்ணதாசன் கூறிய அர்த்தமுள்ள இந்து மதக் கருத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளன.                             

ஏனைய பதிவுகள்

Eye Of Horus Megaways Slot Review

Content Expanding Wilds – echtgeld online spielautomaten Kostenlos Spielen Eye Of Horus Um Echtgeld Spielen Verwenden Sie die Registerkarte “Einsatz ändern”, um für jede Runde