ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7, மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஜனவரி 2013. (கொழும்பு 6: A B Creator and Publisher, Station Road).
147 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-4568-15-0.
திருக்கோணமலை மாவட்டத்தில் வழக்கிலிருந்ததும், தற்போதும் வழக்கிலிருப்பவையுமான நாட்டார் பாடல்களின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. வாழ்த்துப்பாடல், தாலாட்டுப்பாடல், சாய்ந்தாடம்மா, சப்பாணி கொட்டல், கிட்டியடித்தல், கோலாட்டம், ஊஞ்சற் பாட்டு, வேடிக்கைப் பாடல், மலையக மக்களின் வாழ்வியல், கறுப்புக் கோட்டுக் கங்காணி, ஏற்றப்பாட்டு, ஏர்ப்பாட்டு, இருகால் தலை மூன்று, மாரி மழை பெய்ய வேணும், மழையே வா, மழை பொழிந்தது, களையெடுத்தல், அருவி வெட்டல்-அறுவடைப் பாடல், நெல்லுக் குற்றும் பாடல், விறகொடிக்கப் போதல், கோப்பிப்பழம், மீன் பிடித்தல், துள்ளுதையா என் மனது, பரிகாசப்பாடல், மாட்டுவண்டி, அம்பாப்பாட்டு, காதற் பாட்டு, பல்சுவைப் பாட்டு, ஒப்பாரிப் பாட்டு ஆகிய தலைப்புகளில் இவை தொகுக்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 232996).