எஸ்.தில்லைநாதன். சென்னை 600002: காந்தளகம், 834, அண்ணாசாலை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1994. (சென்னை: காந்தளகம்).
344 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 17.5×12.5 சமீ.
இரு பகுதிகளைக்கொண்ட இந்நூலின் முதற்பகுதி இலக்கியமாகவும், இரண்டாம் பகுதி இலக்கணமாகவும் அமைகின்றன. ஏழு இயல்களைக்கொண்ட முதலாம் பகுதியில் பாட்டும் தொகையும், காவியங்களும் பிரபந்தங்களும், புராண இதிகாச இலக்கியங்கள், திருமுறை இலக்கியம், இலக்கிய வரலாற்றுச் செல்நெறிகள், தமிழில் நாடகமும் கூத்தும், தமிழரல்லாதோரின் தமிழ்மொழிப்பணிகள் ஆகிய தலைப்புகளில் விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. இலக்கணம் பற்றிக்கூறும் பகுதி இரண்டில், திராவிட மொழிக் குடும்பம், இலக்கண வரலாறு, பதங்கள், முதனிலை எழுத்துகள், பெயர்ச்சொற்கள்-திணை, பால் உணர்த்துதல்கள், வேற்றுமைகள், சொற்பாகுபாடு, வினைச்சொற்கள், வினைச்சொல் ஆக்கம், சார்பெழுத்துகள், தன்வினையடியிலிருந்து பிறவினை முற்றுகளும் எச்சங்களும் ஆக்கப்பெறுதல், சொற்றொடர், புணர்ச்சி வகை, யாப்பு, கவிதையின் பண்புகள் ஆகிய 15 இயல்களில் விளக்கங்கள்; தரப்பட்டுள்ளன. துறைநீலாவணையைச் சேர்ந்த இந்நூலாசிரியர் சைவப்புலவர் எஸ்.தில்லைநாதன் கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 104384).