9450 காச நோய்: சமூக அணுகுதல்.

சி.யமுனானந்தா. யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி சி.யமுனானந்தா, மாவட்ட காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரி, மார்பு நோய்ச் சிகிச்சை நிலையம், பண்ணை, 2வது பதிப்பு, மார்ச் 2011, முதற்பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்:கரிகணன் பிறின்ரேர்ஸ், காங்கேசன்துறை வீதி).

v, 99 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-52458-0-7.

காசநோய் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட இந்நூல், யாழ்ப்பாண சுகாதாரப் பகுதியின் மாவட்ட காசநோய்க் கட்டுப்பாட்டு அதிகாரியான டாக்டர் சி.யமுனானந்தா அவர்களின் மற்றுமொரு மருத்துவ நூற்படைப்பாகும். காசநோயும் சுவாச ஆரோக்கியமும், நுரையீரலில் ஏற்படும் காசநோய,; நுரையீரல் அல்லாத பகுதிகளில் ஏற்படும் காசநோய், சிறுவர்களில், பெண்களில் ஏற்படும் காசநோய், காசநோயும் சலரோகமும், காசநோயும் புகைத்தலும், காசநோயும் மதுபானமும், காசநோயும் போஷாக்கும், காசநோயும் எய்ட்ஸ் நோயும், முதியவர்களில் காசநோய், மருந்திற்கு எதிர்ப்புத் தன்மையுடைய காசநோய், காசநோயினை ஆய்வுகூடங்களில் கண்டறிதல், ஆய்வுகூடங்களில் தரம்பேணுதலும் கட்டுப்பாடும், காசநோய்க்கான சிகிச்சை, தொய்வு நோயினை காசநோயிலிருந்து பிரித்தறிதல், காசநோய் பற்றிய விழிப்புணர்வு ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட இந்நூலின் இறுதியில் சமூகத்துக்குச் செய்தியைக் கொண்டுசேர்க்கும் விழிப்புணர்வுப் பாடல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. போதிய விளக்கப்படங்களுடன் கூடிய நூல். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 217067).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

Gamble Free online Games

Content Achilles and Patroclus Content For it GameBrowse all of the ( Achilles 2 PS6 Discharge Date – Whenever Have a tendency to The fresh

11732 மங்கையராய்ப் பிறப்பதற்கே: மேடை நாடகங்கள் நான்கின் தொகுப்பு.

வெ.தவராஜா. மட்டக்களப்பு: அனாமிகா, இல. 48, பெய்லி முதலாம் குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, பெப்ரவரி 1997. (சென்னை 14: வே.கருணாநிதி, பார்க்கர் கம்பியூட்டர்ஸ்). 48 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 21×14