க.திலகநாதன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
96 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-423-2.
இந்நூலில் நாடகம் எனும் எண்ணக்கருவும், செய்கையும் செய்கைக்கான பின்புலமும், கிராமியக் கலைகளும் செந்நெறிக் கலைகளும், தமிழர் நாடகக்கலை, அரங்கினூடே கற்றல் கற்பித்தல் ஓர் அனுபவப் பகிர்வு, நாட்டிய சாஸ்திரம்:சில குறிப்புகள், சீன மரபுவழி நாடக அரங்கு: ஒரு சிறு அறிமுகம், நீர்வேலி வசந்தன் கூத்து: ஒரு சிறு குறிப்பு, அரிஸ்ரோட்டிலின் நாடக சிந்தனைகள், அரங்க கட்டடக்கலை, அரங்கில் ஊமமும் உரையாடலும், நெறியாள்கையும் நெறியாளரும், நாடகப் படைப்பாக்க செல்நெறிகள் ஆகிய 12 கட்டுரைகள் உள்ளடங்குகின்றன. நூலாசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடத்தைச் சிறப்புப் பாடநெறியாகப் பயின்று அதில் இளங்கலைமாணிச் சிறப்புப் பட்டம் பெற்றவர். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றவர். யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் அத்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.