கோகிலா மகேந்திரன். தெல்லிப்பழை: கலை இலக்கியக் களம், 1வது பதிப்பு, ஜனவரி 1997. (மருதனாமடம்: அம்மா அச்சகம், இணுவில்).
viii, 33 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 40., அளவு: 18×12.5 சமீ.
கிரேக்கத்தின் மூத்த நாடக ஆசிரியர் எனக் கருதப்படும் ஈஸ்கிலஸ் (Aeschylus, கி.மு.525-456) முதல் புதிய மகிழ்நெறியின் உருவம் எனப்படும் மெனாண்டர் (Menander கி.மு. 343-292) வரையான சில முக்கிய நாடகாசிரியர்களின் பங்களிப்புக்களை இந்நூல் சுருக்கமாக அறிமுகம் செய்கின்றது. நாடக-அரங்கியல் வரலாற்றில் ஈடுபாடுகொண்ட பொது வாசகரைக் கருத்திற்கொண்டு எழுதப்பட்டுள்ள இந்நூல் க.பொ.த. உயர்தரம், வட இலங்கைச் சங்கீத சபை ஆகியவற்றின் நாடகமும் அரங்கியலும் கற்கை நெறியைப் பயில்பவர்களுக்குப் பெரிதும் பயன்படவல்லது. கலை இலக்கியக் களத்தின் எட்டாவது வெளியீடு இது. சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் 72ஆவது ஆண்டு நிறைவின் நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 119084).