பத்மா இளங்கோவன். சென்னை 600109: யுனிக் மீடியா இன்டகிரேட்டர்ஸ், இல.8, ஆறாவது சந்து, 8ஆவது பிரதான சாலை, வைஷ்ணவி நகர், திருமுல்லைவாயில், 1வது பதிப்பு, மார்ச் 2014. (சென்னை 77: மணி ஓப்செட்).
64 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 24×18 சமீ., ISBN: 978-93-83051-27-4.
பிரான்சில் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்துப் படைப்பாளி வி.ரி.இளங்கோவனின் துணைவியாரான நூலாசிரியை, பிரான்சில் பரிசு என்ற பெயரில் சிறுவர் சஞ்சிகை ஒன்றினை நடத்தியவர். தமிழ்நாடு கு.சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளையின் சிறுவர் இலக்கியத்திற்கான விருதினை 2012இல் பெற்றவர். சிறுவர் இலக்கிய வரிசையில் பத்மா இளங்கோவனின் மற்றுமொரு வரவாக இந்நூல் அமைகின்றது.