9544 பாபா சொன்ன கதைகள்.

மதிவதனி சரவணபவன் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: பகவான் ஸ்ரீ சத்யசாயி சேவா நிலையம்-தாவடி, பிள்ளையார் கோவிலடி, தாவடி, கொக்குவில், 1வது பதிப்பு, சித்திரை 1991. (யாழ்ப்பாணம்: பா.நித்தியானந்தன், நித்தி அச்சகம்).

(8), 92 பக்கம், விலை: ரூபா25., அளவு: 18.5×12.5 சமீ.

ஸ்ரீ சத்யசாயி பாபா தனது சொற்பொழிவுகளிடையே ‘ஒரு சின்ன உதாரணம்’ என்று கூறிவிட்டு ஒரு கதைமூலம் பெரிய படிப்பினைகளைப் போதிப்பார்.  பாலவிகாஷ் பள்ளிகளில் பயிலப்படும் இத்தகைய கதைகளின்பால்; சிறுவர்களிடையே காணப்படும் ஆர்வம் காரணமாக இத்தொகுப்பினை ஆசிரியர் தொகுத்திருக்கின்றார். இந்நூலில் அத்தகைய 42 கதைகள் தொகுக்கப்பெற்றுள்ளன. இறைவன் எல்லாரிடத்தும் இருக்கின்றார், இறைவன் எதற்கு மதிப்புக் கொடுக்கின்றார், இறைவனின் பரீட்சை, இறைவனிடம் கேட்கவேண்டியது, இறைவன் எப்போது உதவுவார், இறைவன் எப்படிக் கொடுப்பார், ஈஸ்வர சங்கற்பம், தளராத தெய்வபக்தி போன்ற இன்னோரன்ன பொருத்தமான தலைப்புகளில் இக்கதைகள் சுவையாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 84134).

ஏனைய பதிவுகள்

Sistem iger na srečo Oscar’s Grind

Objave Zakaj se uporabljajo naprave za stave | Pregled športne knjige ladbrokes Katera športna stavnica je najboljša za uporabo? Razumevanje osnov upravljanja bankrolla pri igri