9554 சிறுவருக்கேற்ற மாதிரிக் கட்டுரைகள்.

தேவதாசன் ஜெயசிங். நீர்கொழும்பு: தாசன் வெளியீட்டகம், 1வது பதிப்பு, 2002. (அச்சக விபரம் தரப்படவில்லை).

28 பக்கம், விலை: ரூபா 50., அளவு: 20.5×14.5 சமீ.

மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட நூலாசிரியர் இதுவரை 75 நூல்களுக்கு மேல் எழுதி வெளியிட்டவர். தாசன் வெளியீட்டகம் என்ற அமைப்பினை கண்டியிலும் நீர்கொழும்பிலும் நடத்துபவர். வரவேற்புரை, நல்லொழுக்கம், காலைக்காட்சி, மாலைக்காட்சி, கடற்கரைக்காட்சி,  தொலைக்காட்சி, ஆரோக்கிய வாழ்வு, கல்விச் செல்வம், ஒன்றுபட்டால் வாழ்வு உண்டு, விஞ்ஞான விந்தைகள், நன்றி மறவேல், பாவேந்தர் பாரதிதாசன், சுவாமி ஞானப்பிரகாசர், அன்னை தெரேசா,  சுவாமி விபுலானந்தர், பாரதியார், சோமசுந்தரப் புலவர், தந்தை தாய் பேண், பருவத்தே பயிர் செய், நன்றியுரை ஆகிய 20 தலைப்புகளின்கீழ் இந்நூலிலுள்ள கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 136794).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்