9571 உயிர்ச் சமர்.

ஜே.எஸ்.ராஜ். யாழ்ப்பாணம்: தமிழ் இலக்கிய மன்றம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ் பிரைவேற் லிமிட்டெட், 424, காங்கேசன்துறை வீதி).

viii, 55 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18.5×13 சமீ., ISBN: 978-955-54232-0-5.

பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பொருண்மைகளில் வெளிவந்த சிறியதும், நீண்டதுமான 31 கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பெண் விடுதலை,  முதுமை வாழ்வு, காதல், நட்பு, ஏமாற்றம், விரக்தி மற்றும் சமகால வாழ்வியல் சூழல் என்று கவிதைகளின் பாடுபொருள் விரிவானவை.  தாய்த்தீவு, புது வசந்தம், பெண்ணியம், முதுமையின் முகவரி, காதல் கற்கள், நட்புக்காக, ஏமாற்றம், அநாதைப் பிணங்கள், தொலைபேசி, வெறுமை, இறுதித் தீர்ப்பு, சிதையாத கனவு, முகவரித் தேடல், நரகப் பிரபஞ்சம், தாய்முகம், நியாயம், பெண்ணே புறப்படு,  கல்லறை, நீதிவான், அதிர்ஷ்டம், தேர்தல், கண்ணீர்க் கல்லறை, நட்பு, மணமாலை, மனிதப் பிரசவம், கிடைக்காத விடிவு, நிம்மதியைத் தேடி, மரணத்தின் மதிப்பீடு, ஏக்கங்கள், முதல் சந்திப்பு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 225904).

ஏனைய பதிவுகள்

12801 – குழந்தையும் தேசமும் (சிறுகதைகள்).

சி.சிவசேகரம். கொழும்பு 11: தேசிய கலை இலக்கியப் பேரவை, 44, மூன்றாவது தளம், ஊ.ஊ.ளு.ஆ கொம்பிளெக்ஸ், 1வது பதிப்பு, நவம்பர் 2011. (கொழும்பு 11: வேர்ல்ட் விஷன் கிராப்பிக்ஸ், இல. 5, முதலாம் மாடி,

10659 மனித தர்மம்: நாடக நூல்.

கலைச்செல்வன். கொழும்பு 6: இலக்கிய முற்றம், இல.6, பெட்ரிக்கா வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (கொழும்பு 13: டிசைன் லாப், 190, ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தை). xvi, 69 பக்கம், சித்திரங்கள், விலை: