9582 ஒரு பயணியின் போர்க்காலக் குறிப்புகள்.

கருணாகரன். சென்னை 600005: கருப்புப் பிரதிகள், 855, பப்பு மஸ்தான் தர்கா, இலாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, டிசம்பர் 2012. (சென்னை: ஜோதி என்டர்பிரைசஸ்).

126 பக்கம், விலை: இந்திய ரூபா 80., அளவு: 21.5×14 சமீ.

1963இல் இலங்கையின் வடக்கே இயக்கச்சியில் பிறந்த கருணாகரன், ஊடகவியலாளராகவும் கவிஞராகவும் பத்தி எழுத்தாளராகவும் அறியப்பட்டவர். ஒரு பொழுதுக்குக் காத்திருத்தல், ஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள், பலியாடு, எதுவுமல்ல எதுவும் ஆகிய நூல்களை ஏற்கெனவே வழங்கியவர். கருணாகரனின் மற்றுமொரு கவிதைத் தொகுப்பே இந்நூலாகும். கவிதைகள் பலவும் போர் இலக்கியம் சார்ந்த கவிதைகளாகக் காணப்படுகின்றன. போரின் அவலங்களையும் கொடுமைகளையும் துன்ப துயரங்களையும் இக்கவிதைகள் பாடுபொருளாகக் கொண்டுள்ளன. இவரது கவிதைகள் சிங்களம், ஆங்கிலம், மலையாளம், கன்னடம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் ஏற்கெனவே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 234953).

ஏனைய பதிவுகள்

200 No deposit Casinos 2024

Blogs Modern Ports Will be the Totally free Spins That need No-deposit Extremely 100 percent free? The inner Volt currency is a pleasant tip plus