9588 கம்பதாசன் கவிதைத் திரட்டு.

கம்பதாசன் (மூலம்), சிலோன் விஜயேந்திரன் (தொகுப்பாசிரியர்). சென்னை 4: அல்லயன்ஸ் கம்பெனி, 244, சு.மு.ஆரவவ சுழயனஇ தபால்பெட்டி எண் 617, மயிலாப்பூர், 1வது பதிப்பு, டிசம்பர் 1987. (சென்னை 5: பிஸ்மி பிரின்டர்ஸ்).

xxiv, 304 பக்கம், விலை: இந்திய ரூபா 25.00., அளவு: 18×12.5 சமீ.

தமிழகத்தின் தென் ஆர்க்காடு மாவட்டத்தின் திண்டிவனம் பகுதியில் உள்ள உலகாபுரம் கிராமத்தில் பிறந்த அப்பாவு என்ற இயற்பெயர் கொண்ட, கவிஞர் கம்பதாசன் (15.9.1916-23.5.1973) எழுதிய கவிதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவருகின்றது. கம்பதாசன் எழுதிய 372 கவிதைகளை இத்தொகுப்பில் சேர்த்து வழங்கியுள்ளார் சிலோன் விஜயேந்திரன். ஏற்கெனவே விஜயேந்திரன் இவரது படைப்புகளை  கம்பதாசன் திரை இசைப் பாடல்கள், கம்பதாசன் காவியங்கள், கம்பதாசன் சிறுகதைகள், கம்பதாசன் நாடகங்கள், கம்பதாசன் கவிதா நுட்பங்கள்ஆகிய தலைப்புகளிலும் தொகுத்ததுடன் கம்பதாசனின் வாழ்வை கவிஞர் கம்பதாசன் வாழ்வும் பணியும் என்ற நூலின் மூலமும் தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தியிருந்தார். தமிழகத்தில் வாழ்ந்து மறைந்த யாழ்ப்பாணத்தவரான விஜயேந்திரன் 1946இல் பிறந்தவர். 16வது வயதிலேயே எழுத்துத்துறைப் பிரவேசம் கண்டவர். இலக்கியவாதியாக மட்டுமன்றி தமிழகத்தின் திரைப்பட நடிகராகவும் இருந்து 65க்கும்  மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் வேடமேற்று நடித்தவர். நவரச தனிநடிப்பிலும் புகழ்பெற்றவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 99802).                                                                                                                                                                                                            

ஏனைய பதிவுகள்

online casino login

Online casino bonus Real money online casino Casino online Online casino login As we move into 2024, several online slot games are set to capture

Totally free and online

Blogs Video game Features Solitaire Bucks Discount coupons (Involved in Arcade Video game You can lawfully take part in a real income tournaments throughout Us states